புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா: முழுமையான ஆய்வறிக்கை அளிக்க கவர்னர் உத்தரவு


புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா: முழுமையான ஆய்வறிக்கை அளிக்க கவர்னர் உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2021 5:39 PM GMT (Updated: 15 July 2021 5:39 PM GMT)

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் முழுமையான ஆய்வறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.



புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியாக 20வது வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில், கவர்னர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்.

குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளை தாக்கினால் எதிர்கொள்வதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கெனவே செய்யப்பட்டிருப்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது.

கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் 3வது அலை தாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும். தடுப்பூசியால் புதுச்சேரி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக தடுப்பூசி செலுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story