தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு மேலும் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 581 பேர் பலி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 581 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து 2-வது நாளாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 13-ந் தேதி 31 ஆயிரத்து 443 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் (14-ந்தேதி) இந்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 792 ஆக அதிகரித்தது.
நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 41 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 19 லட்சத்து 43 ஆயிரத்து 488 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் பாதிப்பு விகிதம் 2.15 சதவீதம் ஆகும். தொடர்ந்து 24-வது நாளாக தினசரி பாதிப்பு விகிதம் 3 சதவீதத்துக்குள் அடங்கி இருக்கிறது. வாராந்திர பாதிப்பு விகிதம் 2.21 சதவீதம் ஆகும்.
நேற்று அதிக தினசரி பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக 5 மாநிலங்கள் உள்ளன.
அவை கேரளா (15,637), மராட்டியம் (8,602), ஆந்திரா (2,591), தமிழ்நாடு (2,458), ஒடிசா (2,074) ஆகும்.
நேற்று புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 75.02 சதவீதத்தினர் இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 581 பேர் பலியாகி உள்ளனர். நேற்றுமுன்தினத்துடன் ஒப்பிடுகையில் (624) இதுகுறைவுதான். கொரோனா பலி விகிதம் 1.33 சதவீதமாக தொடர்கிறது.
நேற்று மராட்டியத்தில் 170 பேரும், கேரளாவில் 128 பேரும் இறந்துள்ளனர்.
அதே நேரத்தில் அந்தமான் நிகோபார், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன்டையு, கோவா, குஜராத், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்திய பிரதேசம், சிக்கிம், உத்தரபிரதேசம் ஆகிய 11 மாநிலங்களும், யூனியன்பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பின.
நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 130 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். இதனால் இதுவரை மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 43 ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது.
மீட்பு விகிதம் 97.28 சதவீதமாக நீடிக்கிறது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,095 அதிகரித்துள்ளது.
இதனால் காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 41 ஆக கூடியது. இருப்பினும் இது மொத்த பாதிப்பில் 1.39 சதவீதம் மட்டுமே ஆகும்.
இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story