காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு


காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2021 3:55 AM IST (Updated: 16 July 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் அத்துமீறிய தாக்குதல்கள், ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் விநியோகிப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், நேற்று எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். குறிப்பாக காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்குச் சென்று அங்கு ராணுவத்தின் செயல்பாட்டு தயாா் நிலைகள், ஜம்மு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை, ஊடுருவல் எதிா்ப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவத்தின் களத் தளபதிகளை சந்தித்து பிபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story