டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி உடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு

மேகதாது அணைக்கு அனுமதியளிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மந்திரியுடன் தமிழக சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் குழு சந்தித்தனர்.
சென்னை,
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அனைத்து கட்சி குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது.
திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், .வைகோ, ஜி.கே.மணி, பாலகிருஷ்ணன், திருமாவளவன், பால் கனகராஜ் உள்ளிட்ட 13 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த அனைத்துக்கட்சி குழவினர், மேகதாது பகுதியில் அணைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கியதோடு, அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இன்று மாலை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மந்திரியை சந்திக்கும் போது, கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை எதிர்த்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களின் நகல் வழங்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story