மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராமங்களில் 5,947 பள்ளிகள் திறப்பு


மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராமங்களில் 5,947 பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 16 July 2021 8:27 PM GMT (Updated: 16 July 2021 8:27 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் கொரோனா இல்லாத கிராமங்களில் 5,947 பள்ளிகள் திறக்கப்பட்டன.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராம பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார். அதன்படி மாநிலத்தில் பல கிராமங்களில் நேற்று முன்தினம் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 5 ஆயிரத்து 947 பள்ளிகள் திறக்கப்பட்டது. 

முதல் நாளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 599 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று உள்ளனர். கோலாப்பூர் மாவட்டத்தில் 940 பள்ளிகளும், புனே மாவட்டத்தில் 90 பள்ளிகளும், திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு இடங்களான சிந்துதுர்க், தானே, ஹிங்கோலி போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

Next Story