65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்


65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 17 July 2021 5:47 AM GMT (Updated: 17 July 2021 5:47 AM GMT)

டிசம்பர் மாதம் வரை கூடுதலாக 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லி,

டிசம்பர் மாதம் வரை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய முடிவு செய்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை பெற மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.205க்கும், கோவாக்சின் தடுப்புசி ரூ.215க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story