தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு: மேலும் 42 பேர் பலி + "||" + Karnataka reports 1,869 new #COVID19 cases, 3,144 recoveries, and 42 deaths.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு: மேலும் 42 பேர் பலி

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு: மேலும் 42 பேர் பலி
கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,869 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 82 ஆயிரத்து 239 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 42 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 121 ஆக உயர்ந்தது.

நேற்று 3,144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 16 ஆயிரத்து 13 ஆக உள்ளது. 30 ஆயிரத்து 82 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக பெங்களூரு நகரில் 432 பேர் பாதிக்கப்பட்டனர். தட்சிண கன்னடாவில் 218 பேரும், மைசூருவில் 207 பேரும், ஹாசனில் 173 பேரும், சிக்கமகளூருவில் 101 பேரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி இருந்தது. கதக்கில் மட்டும் பாதிப்பு இல்லை.

மைசூருவில் 7 பேர், பெங்களூரு நகர், பல்லாரியில் தலா 6 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், கோலாரில் 4 பேர், ஹாசன், மண்டியாவில் தலா 3 பேர், துமகூருவில் 2 பேர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், தார்வார், சிவமொக்கா, உடுப்பியில் தலா ஒருவர் என 42 பேர் இறந்தனர். 16 மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2. மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா
மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
4. புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.