3 நாள் பயணமாக 25-ந் தேதி காஷ்மீர் செல்கிறார் ஜனாதிபதி
Photo Credit: PTIஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காஷ்மீருக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காஷ்மீருக்கு செல்கிறார். மறுநாள், தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
திராஸ் போர் நினைவுச்சின்னத்தில் நடைபெறும் கார்கில் போர் வெற்றிதின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். 27-ந் தேதி, மாதா வைஷ்ணோ தேவி குகைக்கோவிலுக்கு அவர் செல்வார் என்று தெரிகிறது. அதே நாளில் அவர் டெல்லி திரும்புகிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கீழ்நிலை பணியாளர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






