ஆந்திராவில் புதிதாக 1,628 பேருக்கு கொரோனா பாதிப்பு


ஆந்திராவில் புதிதாக 1,628 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 19 July 2021 6:52 PM IST (Updated: 19 July 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,628 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் அரசு மேற்கொண்ட ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.  

இந்த நிலையில் இன்று ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் புதிதாக 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,41,724 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை 13,154 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 23,570 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,744 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 19,05,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story