மராட்டியம்: பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த 4 வயது சிறுவன்; தேடும் பணி தீவிரம்


மராட்டியம்:  பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த 4 வயது சிறுவன்; தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 July 2021 2:09 PM GMT (Updated: 19 July 2021 2:09 PM GMT)

மராட்டியத்தில் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த 4 வயது சிறுவனை தேடும் பணி நடந்து வருகிறது.





பால்கர்,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், வீடுகளை சூழ்ந்தும் தண்ணீர் காணப்படுகிறது.

இதேபோன்று மராட்டியத்தின் பால்கர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  நல்லசோபரா பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையை அடுத்து கழிவுநீர் வழிந்தோடுகிறது.

இதில், கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடை ஒன்றின் மூடி திறந்து கிடந்துள்ளது.  அதில், 4 வயது சிறுவன் ஒருவன் விழுந்து உள்ளான்.  இதுபற்றி துலிஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர காம்பிளே கூறும்போது, போலீசார் சிறுவனை தேடும் பணியை தொடங்கி உள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story