இந்தியாவில் ஒரே நாளில் 47.77 லட்சம் தடுப்பூசிகள்; மொத்த எண்ணிக்கை 41 கோடி

இந்தியாவில் ஒரே நாளில் 47.77 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 41 கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 185வது நாளான இன்று ஒரே நாளில் 47.77 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்த தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 41 கோடியை கடந்துள்ளது.
இவர்களில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 13.24 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story