மேகாலயா மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம்


மேகாலயா மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 21 July 2021 2:18 AM GMT (Updated: 2021-07-21T07:48:44+05:30)

மேகாலயா மற்றும் லடாக் பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அமைந்திருக்கும் வடக்கு காரோ மலைப்பகுதிகளில், இன்று அதிகாலை 2.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.57 மணிக்கு ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானது. இந்த இரு நில அதிர்வுகளும் குறைந்த தீவிரத்தை கொண்டிருந்ததால், மேகாலயா மற்றும் லடாக் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story