எதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு


எதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 22 July 2021 11:39 AM IST (Updated: 22 July 2021 11:51 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தொடரில் இருந்தே இரு அவைகளிலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது

இந்நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை வழங்கினார். பின், பெகாசஸ் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர். 

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 
1 More update

Next Story