காஷ்மீர் என்கவுண்ட்டர்; ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை


காஷ்மீர் என்கவுண்ட்டர்; ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை
x
தினத்தந்தி 23 July 2021 6:36 AM IST (Updated: 23 July 2021 6:36 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றுள்ளனர்.



பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தில் வார்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நேற்று மாலை பயங்கரவாத தேடுதல் வேட்டை நடத்தினர்.  இதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில், இன்று அதிகாலை ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றுள்ளனர்.

தொடர்ந்து என்கவுண்ட்டர் நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.  இந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாத இயக்க முக்கிய தளபதி ஒருவனும், அவனது கூட்டாளியும் வீடு ஒன்றில் சிக்கி கொண்டனர் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story