கருப்பு பூஞ்சை நோய் தொற்று: மராட்டியத்தில் அதிக உயிரிழப்பு; 3வது இடத்தில் தமிழகம்
கோப்பு படம்கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு மராட்டியம் அதிக அளவிலான பலி எண்ணிக்கைகளை கொண்டுள்ளது.
புதுடெல்லி,
கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. அனில் அகர்வாலுக்கு மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் எழுதியுள்ள கடிதத்தில், மராட்டியத்தில் 1,129 பேர் இந்த தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.
இதுவரை 2,813 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளார். இந்த பட்டியலில், மராட்டியத்திற்கு அடுத்து குஜராத் (656) 2வது இடமும், தமிழகம் (334) 3வது இடமும், கர்நாடகா (310) 4 வது இடமும் வகிக்கின்றன.
Related Tags :
Next Story






