கவனமாக இருங்கள், அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை; டெல்லி அரசுக்கு நிதி ஆயோக் உறுப்பினர் ஆலோசனை


கவனமாக இருங்கள், அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை; டெல்லி அரசுக்கு நிதி ஆயோக் உறுப்பினர் ஆலோசனை
x
தினத்தந்தி 23 July 2021 8:36 PM GMT (Updated: 23 July 2021 8:36 PM GMT)

தலைநகர் டெல்லிக்கான கொரோனா மேலாண்மை கொள்கைகளை டெல்லி பேரழிவு மேலாண்மை ஆணையம் வகுத்து வருகிறது.

இந்த ஆணையத்தின் கூட்டம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. அப்போது அதில் பேசப்பட்ட விஷயங்கள் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டன.அதன்படி, ‘கொரோனா விஷயத்தில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என்பதால் டெல்லி அரசு கவனமாக இருக்க வேண்டும்’ என்று நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.

அவர் மேலும், ‘தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், கட்டுப்பாடுகளின் தளர்வுகளால் அது அதிகரிக்கக்கூடும். நாட்டின் தலைநகராக டெல்லி உள்ளதால், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கும் முன் மத்திய அரசின் ஆலோசனையைப் பெற வேண்டும்’ என்றார். கூட்டத்தில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டாக்டர் சம்ரியான் பாண்டா, ‘கொரோனா 2-வது அலையைப் போல 3-வது அலை கடுமையாக இருக்க வாய்ப்பில்லை’ என்றார்.

Next Story