கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு


கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 July 2021 7:28 PM GMT (Updated: 24 July 2021 7:28 PM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்து உள்ளனர்.

திருவனந்தபுரம்,



கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.  கடந்த 24 மணி நேரத்தில் 18,531 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பானது 3.13 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இந்த சூழலில், கேரளாவில் தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.  மொத்த உயிரிழப்பு 15,969 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல 15,507 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பானது 1,38,124 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பும் மாநிலத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இன்று புதிதாக 2 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 4,20,016 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




Next Story