தடுப்பூசிக்கான காலவரையறை விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தடுப்பூசிக்கான காலவரையறை விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 July 2021 8:59 PM (Updated: 24 July 2021 8:59 PM)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் எப்போது முடிவடையும்? என மக்களவையில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி, ‘தற்போது அதற்கான காலவரையறை நிர்ணயிக்க முடியாது’ என தெரிவித்தார்.

இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி நேற்று மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மக்களின் உயிர் அந்தரத்தில் இருக்கிறது, அரசோ காலவரையறை நிர்ணயிக்க முடியாது என ஒப்புக்கொண்டுள்ளது, முதுகெலும்பற்ற பழங்கதை’ என சாடியிருந்தார்.

இதைப்போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், ‘தடுப்பூசி தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் மத்திய அரசின் பொய் அம்பலப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
1 More update

Next Story