மராட்டியத்தில் நிலச்சரிவு: உயிரிழந்த 52 உடல்களை மீட்டது தேசிய பேரிடர் பொறுப்பு படை


மராட்டியத்தில் நிலச்சரிவு:  உயிரிழந்த 52 உடல்களை மீட்டது தேசிய பேரிடர் பொறுப்பு படை
x
தினத்தந்தி 24 July 2021 9:54 PM GMT (Updated: 24 July 2021 9:54 PM GMT)

மராட்டியத்தில் கனமழை, நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 52 உடல்களை தேசிய பேரிடர் பொறுப்பு படை மீட்டு உள்ளது.



மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால், வீடுகள், பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன.  நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்நிலையில், தேசிய பேரிடர் பொறுப்பு படை சார்பில் வெளியான அறிக்கையில், நிலச்சரிவு பகுதிகளில் இருந்து உயிரிழந்த 52 உடல்களை மீட்டு உள்ளோம்.  அந்த பகுதியில் சிக்கி தவித்த 1,800 மக்களை மீட்டுள்ளோம்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கொண்ட 87 பேரை மீட்டு பாதுகாப்பு மிக்க பகுதிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளோம்.  காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று மராட்டியத்தின் ராய்காட், ரத்னகிரி மற்றும் சத்தாரா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவித்து உள்ளது.


Next Story