தடுப்பூசிகள் எங்கே? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


தடுப்பூசிகள் எங்கே? பிரதமர் மோடிக்கு  ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 25 July 2021 9:22 AM GMT (Updated: 25 July 2021 9:22 AM GMT)

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று மத்திய அரசு மீது  ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். தடுப்பூசி மேலாண்மையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, இன்று தனது டுவிட்டரில் தடுப்பூசிகள் எங்கே? என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.  

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது எனவும்  இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திலுந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது எனவும்  பிரதமர் மோடியை சாடியுள்ளார். 

Next Story