இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 35,968- பேர் குணம் அடைந்த நிலையில், மேலும் 461-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 189- ஆக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 79 ஆயிரத்து 106- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 967- ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story