டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி


டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 27 July 2021 8:46 AM IST (Updated: 27 July 2021 8:46 AM IST)
t-max-icont-min-icon

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். 

மேற்குவங்காள சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அவர், டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியையும், ஜனாதிபதியையும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாநில மந்திரி சபை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா பானர்ஜி, விமானம் மூலம் டெல்லி சென்றார்.

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார். மாலை  4 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

முன்னதாக,  காங்கிரஸ் மூத்த தலைவரான கமல் நாத் மற்றும் ஆனந்த் சர்மா முறையே பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
1 More update

Next Story