முக்கிய தலைவர்கள் வருகையால் கோயிலில் கூட்ட நெரிசல்; பெண்கள் - குழந்தைகள் காயம்

முக்கிய தலைவர்கள் வருகையால் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
போபால்
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகலேஷ்வர் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல் மந்திரி உமா பாரதி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் பலரும் கோயிலுக்கு வருகை தந்ததால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் உஜ்ஜைனின் மகாகலேஷ்வர் கோயில் ஒன்றாகும். குறைந்தபட்சம் ஒரு கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் அல்லது கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் உள்ள பக்தர்களுக்காக இது கடந்த மாதம் இந்த கோயில் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story