மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதுடெல்லி
நேற்று முன்தினம் தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்ற அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.
இன்று காலை 11.20 மணிக்கு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.]
இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், தம்பிதுரை, ரவீந்திரநாத்குமார், சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி
மரியாதை நிமித்தமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தோம். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியிடம் என்ன பேசினோம் என்று அமித்ஷாவிடம் கூறினோம் என கூறினார்.
Related Tags :
Next Story