கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 July 2021 2:32 PM GMT (Updated: 2021-07-27T20:02:13+05:30)

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு சிறார் உள்பட 5 பேருக்கு ஜிகா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேர் 38, 17, 26, 12 மற்றும் 37 வயதினர் ஆவர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் வைராலஜி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் சீராக உள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story