இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ரஷிய தடுப்பூசி செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: டாக்டர் ரெட்டி ஆய்வகம்


இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ரஷிய தடுப்பூசி செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: டாக்டர் ரெட்டி ஆய்வகம்
x
தினத்தந்தி 27 July 2021 8:38 PM GMT (Updated: 27 July 2021 8:38 PM GMT)

கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக்-வி எனப்படும் ரஷிய நாட்டின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. விலை உயர்ந்த இந்த தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி லேபரேட்டரி லிமிடெட் எனப்படும் நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்கிறது. இதற்காக ரஷியா நேரடி நிதி உதவியும் அளிக்கிறது. 

ஆய்வக தலைமை நிர்வாக அதிகாரி எம்.வி.ரமணா இதுகுறித்து கூறும்போது, “இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். தற்போது ஸ்புட்னிக்-வி உற்பத்தி நுட்பங்கள் மற்றும் எண்ணிக்கை அதிகரிப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. எங்கள் ஆய்வகத்தில் 25 கோடி டோஸ் மருந்து தயாரிக்கப்பட உள்ளது. இதை 12.5 கோடி மக்களுக்கு 2 தவணைகள் செலுத்த முடியும்” என்றார்.

“ரஷியாவில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதற்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வினியோகத்தில் ஏற்பட்ட தாமதமே காரணமாகும். ஆகஸ்டு மாத இறுதிக்குள் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிடும்” என்றும் அவர் கூறினார்.

Next Story