அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை - மத்திய அரசு ஏற்பாடு


அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை - மத்திய அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 27 July 2021 11:49 PM GMT (Updated: 2021-07-28T05:19:55+05:30)

அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி,

அசாம்-மிசோரம் இடையிலான எல்லை பிரச்சினையில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. 6 பேர் பலியானார்கள்.இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அசாம்-மிசோரம் இடையே இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமை தாங்குகிறார்.

இரு மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மீண்டும் வன்முறை ஏற்படாதவகையில், இக்கூட்டத்தில் அமைதி தீர்வு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story