கேரளாவில் புதிதாக 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 131 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 July 2021 1:35 PM GMT (Updated: 2021-07-28T19:05:53+05:30)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,056 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனாவின் 2வது அலையின் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,056 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ மாநிலத்தில் புதிதாக 22,056 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,27,301 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 131 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,457 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17,761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 31,60,804 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,49,534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story