அசாம்-மிசோரம் இடையே எல்லையில் மத்திய படை பாதுகாப்பு படை பணியில் அமர்த்த இரு மாநிலங்களும் ஒப்புதல்

அசாம் - மிசோரம் இடையிலான பிரச்சினைக்குரிய எல்லை பகுதியில், மத்திய ஆயுத போலீஸ் படையை நியமிக்க, இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.
புதுடெல்லி,
அசாம்-மிசோரம் இடையிலான எல்லை பிரச்சினையில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. 6 பேர் பலியானார்கள். இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமை தாங்கினார்.
இரு மாநிலங்களும் தொடர்ந்து பேச்சு நடத்தி, எல்லைப் பிரச்சினையில் சுமுக தீர்வு காண வேண்டும்,'' என, உள்துறை செயலர் வலியுறுத்தினார். பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில், இரு மாநிலங்களுக்கும் பொதுவான, மத்திய ஆயுத போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் அமர்த்த, இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.
Related Tags :
Next Story