ஒடிசா: கற்களை கொண்டு சாலையை சீரமைத்த சிறுவர்கள்


ஒடிசா: கற்களை கொண்டு சாலையை சீரமைத்த சிறுவர்கள்
x
தினத்தந்தி 29 July 2021 12:45 AM GMT (Updated: 2021-07-29T06:15:19+05:30)

ஒடிசாவில் கற்கள், செங்கற்களை கொண்டு சிறுவர்கள் சாலையை சீரமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புவனேஷ்வர், 

ஒடிசா மாநிலம் பாக்மாரா கிராமத்தைச் சேர்ந்த 4 மற்றும் 5 சிறுவர்கள் தானாக முன்வந்து கற்கள், செங்கற்களை சேகரித்து குண்டும் குழியுமான இருந்த சாலையை சரிசெய்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

 இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம், அது உண்மை எனத் தெரிந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வளர்ச்சி அதிகாரி  மனோஜ் பெஹெரா கூறியுள்ளார்.

Next Story