தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடும் வரையில் 48 சதவீத பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை; கருத்துக்கணிப்பு முடிவு + "||" + 48 per cent parents not willing to send their kids to schools till they get Covid vaccines: Survey

கொரோனா தடுப்பூசி போடும் வரையில் 48 சதவீத பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை; கருத்துக்கணிப்பு முடிவு

கொரோனா தடுப்பூசி போடும் வரையில் 48 சதவீத பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை; கருத்துக்கணிப்பு முடிவு
கொரோனா தடுப்பூசிபோடும் வரையில், 48 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பவில்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கருத்துக்கணிப்பு
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடிய பள்ளிக்கூடங்களை எப்போது திறப்பது என்பது என்ற கேள்வி 
எழுந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற ஆன்லைன் தளம் நாட்டின் 361 மாவட்டங்களில், 32 ஆயிரம் பெற்றோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-

எப்போது திறந்தாலும் தயார்...

* 30 சதவீத பெற்றோர், தங்கள் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்து விட்டால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயார் என்று கூறுகின்றனர்.

* 21 சதவீத பெற்றோர், பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கின்றனவோ அப்போது தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு தயார் என்கிறார்கள்.

தடுப்பூசி போடுகிற வரையில் தயார் இல்லை...

* 48 சதவீத பெற்றோர், கொரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிற வரையில், அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயாராக இல்லை என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் பா.ஜ.க. எம்.பி.க்களிடம் பேசுகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது விரைவில் தொடங்கி விடும் என தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பகுதியளவில் இந்த மாதம் பள்ளிக்கூடங்களை திறந்துள்ளனர். ராஜஸ்தான், இமாசலபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் பளளிக்கூடங்களை திறக்கப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 87.6 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன; மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் 87.6 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தடுப்பூசிக்கு ஒப்புதல் எப்போது ? பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கூடுதல் தரவுகளை கோரியது உலக சுகாதார அமைப்பு
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிப்பது மேலும் தாமதம் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
3. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.
4. இந்தியாவில் இன்றும் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி சாதனை
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
5. பிரதமர் மோடி நேரடியாக வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்: மத்தியபிரதேச கிராமவாசி
மத்தியபிரதேச கிராமவாசி ' பிரதமர் மோடியை அழையுங்கள். அவர் இங்கு வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.