எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்ற மேலவை 2 மணிவரை ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற மேலவையில் எம்.பி.க்களின் அமளியால் அவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. எனினும் பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விசயங்களை எழுப்பி, அவையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் இன்று வழக்கம்போல் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில் அவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story