தேசிய செய்திகள்

இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு + "||" + We shall ensure there is no 4th time says Mumbai doctor, who was infected with COVID-19 thrice

இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு

இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை

மராட்டிய மாநிலம் மும்பையின் முலுன்ட் பகுதியில் உள்ள மும்பை மாநகராட்சியின் வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில்  டாக்டர் ஸ்ருஷ்டி டி ஹலாரி (வயது 26) பணியாற்றி வந்தார்

கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதியன்று முதன்முதலில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

ஸ்ருஷ்டி தனது மூன்று மாத வேலையை முடித்துவிட்டு, தனது எம்.டி மற்றும் அமெரிக்காவில் உயர் மருத்துவ படிப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்க தனது வீட்டிற்குத் திரும்பினார். தொடர்ந்து  ஸ்ருஷ்டி  கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8 -ம் தேதியும், இரண்டாவது டோஸை ஏப்ரல் 29-ம் தேதியும் போட்டுக்கொண்டார். 

அவரது குடும்பம் குஜராத்தின் தோலேராவைச் சேர்ந்தது. அவரது பெற்றோர் (தீபக் மற்றும் வைஷாலி) டாக்டர்கள் ஆவர். அவரது தம்பி தவால் மருத்துவம் படித்து வருகிறார். அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இருப்பினும், தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதம் கழித்து மே 29-ம் தேதி மருத்துவர் ஸ்ருஷ்டி இரண்டாவது முறையாக கொரோனாவால்  பாதிக்கப்பட்டார். இந்த முறை லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பின் மீண்டும் ஜூலை 11-ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அவரின் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து ஸ்ருஷ்டி கூறும் போது மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் அதிகம் கஷ்டப்பட்டேன். நானும் என் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது.இப்போது, நான்காவது முறையாக கொரோனா இல்லை என்பதை உறுதி செய்வோம்  என கூறினார்.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி டாக்டர் பிரதீப் மகாஜன் கூறும் போது  கொரோனாவுக்கு நிரந்தர சிகிச்சை இல்லை 

வைரஸ் பிறழ்வைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் இது முழு தடுப்பூசிக்குப் பிறகும் தாக்கக்கூடும், எனவே தடுப்பூசி என்பது கொரோனாவை  முழுவதுமாக தவிர்ப்பதற்கான 100 சதவீத உத்தரவாதம் அல்ல.

வைரஸ் மரபுபிறழ்ந்தவர்களின் கண்டறிதலின் வீதத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாகிவிடும். சில உலகளாவிய மருந்து நிறுவனங்களும் ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் மூன்றாவது பூஸ்டர் ஊசியை பெற மக்களை ஏற்கனவே தயார்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு  ஏற்படாது என்பதில்லை. இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்.ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லாத வகையிலோ இருக்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது என கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2. கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னி...! மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தர செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
3. கோவில்கள் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை - தமிழக அரசு
சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
4. கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
சுத்தம் செய்வதற்காக கோவை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5. 5-18 வயது பிரிவினரிடம் சோதனை...! பயாலஜிகல்-இ தடுப்பூசிக்கு அனுமதி
நிபந்தனைகளுடன் இரண்டு மற்றும் 3ம் கட்ட தடுப்பூசி சோதனையை நடத்த பயாலஜிகல்-இ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.