டெல்லியில் நிதின் கட்கரியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு


டெல்லியில் நிதின் கட்கரியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
x
தினத்தந்தி 29 July 2021 10:06 PM GMT (Updated: 2021-07-30T03:36:16+05:30)

டெல்லி வந்துள்ள மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

மேற்கு வங்க முதல்-மந்திரியும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக டெல்லி வந்துள்ள இவர் பயணத்தின் நான்காம் நாளான நேற்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிரை சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவேண்டிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இதையடுத்து தி.மு.க. - எம்.பி. கனிமொழியை மம்தா சந்தித்தார். அவருடன் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கலந்துரையாடினார்.பின் பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஸ்மியை மம்தா சந்தித்தார். 

Next Story