கணினி மூலம் ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளைப் பரப்புவோருக்கு உரிய தண்டனை: மத்திய அமைச்சர்


கணினி மூலம் ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளைப் பரப்புவோருக்கு உரிய தண்டனை: மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 30 July 2021 1:19 AM GMT (Updated: 30 July 2021 3:04 AM GMT)

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும், பொய்யுரு (கிராபிக்ஸ்) தொழில் நுட்பத்தை தடுத்து நிறுத்த, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? மனிதக் குரலை மாற்றிப் பேசும் பொய்யொலி தொழில்நுட்ப கோளாறுகளை தடைசெய்ய, இந்தியக் குற்றவியல் சட்டத்தில் வழிவகைகள் உள்ளதா? என்றும் கேள்வி.

இதற்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்து கூறியதாவது:-

தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும், பாதுகாப்பு ஆபத்தை விளைவிக்கும் பொய்யுரு தொழில் நுட்பம், கணினியின் உதவியால், ஆள்மாறாட்ட வேலைகளை, இணைதள வீடியோ மூலம் செய்து, பல்வகையான தீமைகளை, விளைவித்து வருகின்றது. கணினியின் மூலம், ஒருவருடைய அடையாளத்தை மாற்றிக் காண்பிப்பது, சட்டத்திற்கு புறம்பான, ஏமாற்றுதல் குற்றமாகும் என்றும் இந்திய குற்றவியல் பிரிவு 416-ன் கீழ் இவ்வகை குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளை கணினி மூலம் பரப்புவோருக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story