காஷ்மீரில் 3 வெவ்வேறு பகுதிகளில் ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு

காஷ்மீரில் 3 வெவ்வேறு பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் ஆளில்லா விமானம் பறந்தது என போலீசார் கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் 3 வெவ்வேறு பகுதிகளில் நேற்றிரவு ஆளில்லா விமானம் பறந்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது என்று சம்பா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் சர்மா கூறியுள்ளார்.
நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட கூடும் என உளவு துறை முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆளில்லா விமானத்தின் சந்தேகத்திற்குரிய வகையிலான நடவடிக்கைகள் தெரியவந்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி எல்லை பாதுகாப்பு படை போலீசார் கூறும்போது, சம்பா பிரிவில் சர்வதேச எல்லை பகுதியருகே வானில் அடையாளம் கண்டறிய இயலாத வகையில் ஒளிகள் தென்பட்டன. அதனை நோக்கி தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதன்பின் அந்த வெளிச்சம் காணாமல் மறைந்து விட்டது என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story