கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று குறைந்தது


கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று குறைந்தது
x
தினத்தந்தி 30 July 2021 1:34 PM GMT (Updated: 2021-07-30T19:04:28+05:30)

கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், நேற்று தினசரி பாதிப்பு  2 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,890- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 1,631-பேர் குணம் அடைந்த நிலையில், இன்று 34 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,478- ஆக உள்ளது. கர்நாடகாவில் இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,525- ஆக அதிகரித்துள்ளது. 

Next Story