கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 July 2021 2:04 PM GMT (Updated: 2021-07-30T19:34:22+05:30)

கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வர மறுக்கிறது. நாட்டிலேயே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளாதான் தற்போது உள்ளது. கடந்த சில தினங்களாக கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி மிரள வைத்துக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில், இன்றும் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,772- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 14, 651-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1.52 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 13.61 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 116-பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story