தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு + "||" + Karnadaka CM MEETS PM MODI

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல் மந்திரி சந்திப்பு
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தனது பதவியை கடந்த 26-ந்தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவி ஏற்றார். 

எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளரான அவர் நேற்று உத்தரகன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பிரதமர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாக பதவி ஏற்றதும் பசவராஜ் பொம்மை கூறினார். பிரதமரை நேரில் சந்திக்க பசவராஜ் பொம்மைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் பசவராஜ் பொம்மை  இன்று டெல்லி புறப்பட்டுச்சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். 


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு
பிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.
2. ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்
ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
3. பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - பிரதமர் மோடி
என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
4. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அண்டை நாடுகளை பாதிக்கும்- பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார்.
5. பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்; இலங்கை அதிபர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.