காஷ்மீரில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம்


காஷ்மீரில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 6:26 PM GMT (Updated: 2021-07-30T23:56:21+05:30)

காஷ்மீரில் ஒரே நாளில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம் காணப்பட்டது.

ஜம்மு,

காஷ்மீரில் டிரோன் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம் காணப்பட்டது.

எல்லையை ஒட்டியுள்ள சம்பா மாவட்டத்தில் சண்டி கிராமத்தில் உள்ள ராணுவ முகாம் அருகிலும், காக்வால் பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் முகாம் அருகிலும், சாலரியன் கிராமத்திலும் என 3 இடங்களில் தென்பட்டது.

வெள்ளை நிற ஒளியை பீய்ச்சியபடி பறந்தது. சாலரியன் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் அதை நோக்கி 2 ரவுண்டு சுட்டனர். ஆனால், அதன்மீது படவில்லை.

Next Story