திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 58 லட்சம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 58 லட்சம்
x
தினத்தந்தி 30 July 2021 7:29 PM GMT (Updated: 2021-07-31T00:59:39+05:30)

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 58 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 837 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8 ஆயிரத்து 67 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 58 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story