நடிகை ஷில்பா ஷெட்டியின் தாயிடம் ரூ.1.6 கோடி மோசடி


நடிகை ஷில்பா ஷெட்டியின் தாயிடம் ரூ.1.6 கோடி மோசடி
x
தினத்தந்தி 30 July 2021 8:54 PM GMT (Updated: 2021-07-31T02:24:06+05:30)

நடிகையின் தாயார் புகார் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது.


மும்பை, 

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த 19-ந் தேதி ஆபாச பட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஷில்பா ஷெட்டியின் தாய் சுனந்தா ஷெட்டி ஜூகு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "கடந்த சில ஆண்டுளுக்கு முன் ராய்காட்டில் சுதாகர் காரே என்பவரிடம் இருந்து ரூ.1.6 கோடிக்கு நிலம் வாங்கினேன். ஆனால் அது வேறு ஒருவருக்கு சொந்தமான நிலம் என்பதும், போலி ஆவணங்கள் மூலம் தன்னிடம் விற்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரூ.1.6 கோடியை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து உள்ளார்" என்றார்.

இந்தநிலையில் நடிகையின் தாயார் புகார் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுதாகர் காரே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story