தேசிய செய்திகள்

இந்தியா, சீனா 12-வது சுற்று பேச்சு; இன்று நடக்கிறது + "||" + Border dispute: India, China to hold 12th round of talks on Saturday

இந்தியா, சீனா 12-வது சுற்று பேச்சு; இன்று நடக்கிறது

இந்தியா, சீனா 12-வது சுற்று பேச்சு; இன்று நடக்கிறது
இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப்பெறப்பட்டன.
மேலும் இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 12-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ எல்லை முனையில் நடக்கிறது.

எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 3½ மாத இடைவெளிக்கு பின்னர் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 201 நாட்களுக்கு பின் குறைந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 201 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக கொரோனா பாதிப்பு 18,795 ஆக பதிவாகி உள்ளது.
2. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
4. இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி
இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஓமனுக்கு பறவைகள் இறக்குமதி செய்ய தடை
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஓமனுக்கு பறவைகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.