சார்ஜ் போட்டபடி பேசிய போது செல்போன் வெடித்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு


சார்ஜ் போட்டபடி பேசிய போது செல்போன் வெடித்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
x
தினத்தந்தி 31 July 2021 11:53 AM IST (Updated: 31 July 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடப்பதால் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பலன்பூர்

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி,  ஷரத்தா தேசாய் ( 17). செல்போனை சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் வெடித்து படுகாயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை எதுவும் நடத்தாமல் அவரது உடலை  அவரது குடும்பத்தினர் எரித்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெச்சாராஜி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடப்பதால் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என மாணவர்களுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

Next Story