பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்,
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அங்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க பஞ்சாபில் கடந்த 20-ம் தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும்
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story