மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 July 2021 10:12 PM IST (Updated: 31 July 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 345- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில்  225 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,467 ஆக உள்ளது.

மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 76,755- ஆக உள்ளது. அதேபோல், மாநில தலைநகர் மும்பையில் 345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் சதவிகிதம் 96.2 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.01 சதவிகிதமாக உள்ளது. 

Next Story