கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு


கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு
x
தினத்தந்தி 31 July 2021 5:36 PM GMT (Updated: 2021-07-31T23:06:47+05:30)

கேரளா மற்றும் மராட்டியத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

பெங்களூரு,

கேரளா, மராட்டிய மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு  ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவின் சான்றிதழைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிகபட்சம் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பயணிக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 

கேரளம் மற்றும்  மராட்டியத்திற்குள் எந்தவொரு பயணியும் நோய்த் தொற்றுடன் நுழையக் கூடாது என்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பேருந்து நடத்துனர்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகே பயணிகளை அனுமதிக்க வேண்டும். மருத்துவக் காரணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story