இந்தியாவில் இதுவரை 46.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 July 2021 10:46 PM GMT (Updated: 31 July 2021 10:46 PM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

நேற்று காலை 8 மணி வரை நாட்டில் இதுவரை 46 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 479 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோசாக 35 கோடியே 98 லட்சத்து 20 ஆயிரத்து 313 பேருக்கும், இரண்டாவது டோசாக 10 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 166 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முதல் டோசாக 35 லட்சத்து 40 ஆயிரத்து 582 பேருக்கும், இரண்டாவது டோசாக 17 லட்சத்து 58 ஆயிரத்து 454 பேருக்கும், மொத்தம் 52 லட்சத்து 99 ஆயிரத்து 36 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story