சைரஸ் பூனாவாலாவுக்கு 'லோகமான்ய திலக்' தேசிய விருது

சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலாவுக்கு 'லோகமான்ய திலக்' தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசியான கோவிஷீட்டை இந்தியாவில் தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலாவுக்கு 'லோகமான்ய திலக்' தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோகமான்ய திலக் அறக்கட்டளையின் தீபக் திலக் கூறியதாவது:
கொரோனா பேரிடரில் சைரஸ் பூனாவாலாவின் பணி போற்றுதலுக்குரியது. அவரின் அயராத அரும்பணியால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது பல்லாயிரக்காணக்கான உயிர்களை காப்பாற்ற பெரிதும் உதவியது. குறைந்த விலையில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரிப்பதில் சைரஸ் பூனாவாலா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.
எனவே, அவரது சேவையைப் போற்றும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் தேசிய விருதை சைரஸ் பூனாவாலாவுக்கு வழங்கி கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது என்றார்.
Related Tags :
Next Story