ஐக்கிய ஜனதாதள தலைவராக லாலன் சிங் தேர்வு


ஐக்கிய ஜனதாதள தலைவராக லாலன் சிங் தேர்வு
x
தினத்தந்தி 1 Aug 2021 5:27 AM IST (Updated: 1 Aug 2021 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் ஆர்.சி.பி.சிங். சமீபத்தில் மத்திய மந்திரி சபை விரிவாக்கத்தின்போது, இவருக்கு கேபினட் மந்திரி பதவி அளிக்கப்பட்டது. எனவே அவர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய தலைவராக ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். டெல்லியில் நேற்று நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தேர்வு நடந்தது. பீகாரின் மங்கர் தொகுதி எம்.பி.யான லாலன் சிங், ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story